உலகம்

ஆப்கானிஸ்தான் : வான்வழித்  தாக்குதலில் 30 தலிபான்கள் பலி 

24th Jul 2021 02:55 PM

ADVERTISEMENT

காபூல் : ஆப்கன் ராணுவம் இரண்டு பகுதிகளில்  மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும் 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும்  அந்நாட்டு பாதுகாப்புத்  துறை அமைச்சர் உறுதிசெய்திருக்கிறார்.

வடக்கு ஜாவ்சான் பகுதியைச் சேர்ந்த முர்காப் மற்றும் ஹாசன் தப்பின் கிராமத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளைச்  சுற்றிவளைத்த ராணுவம் வான்வழித் தாக்குலைத் தொடர்ந்தது . இதில் 19 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதில் தலிபான்கள் பயன்படுத்திய  ஆறு இருசக்கர வாகனங்கள் , இரண்டு பதுங்கு குழிகள் , பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களையும் ராணுவத்தினர் அழித்தனர் . ஆப்கானிஸ்தான் படைகளுக்கும்  மற்றும் பொதுமக்களுக்கும்  எதிரான தாக்குதலை தலிபான்கள் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த வான்வழித் தாக்குதல்கள் ஒரு வார காலமாக தொடர்ந்து வருவது  குறிப்பிடத்தக்கது.

மேலும் தலிபான்கள் நாட்டின்  419 மாவட்டத்தின்  மையப்பகுதிகளைக் கைப்பற்றியிருப்பதால் , ஆப்கன் பாதுகாப்புப் படைகள் காபூல்  உள்ளிட்ட முக்கிய மக்கள் மையங்களைப் பாதுகாக்க தங்கள் நிலைகளை பலப்படுத்தி வருகிறார்கள்.
 

ADVERTISEMENT

Tags : தலிபான்கள் talibans
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT