உலகம்

பிரான்ஸ் நாட்டில் புதிய விதிகள்: தடுப்பூசி செலுத்திக் கொள்ள குவியும் மக்கள்

13th Jul 2021 05:18 PM

ADVERTISEMENT

பிரான்ஸ் நாட்டில் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசியை கட்டாயப்படுத்தாமலேயே மக்கள் தானாக முன்வந்து செலுத்தி கொள்ளும் வகையில் புதிய விதிகளை பிரான்ஸ் அறிவித்துள்ளது.

சுகாதார அனுமதிச் சீட்டு இல்லாத பட்சத்தில் மக்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் தெரிவித்துள்ளார். அதாவது, தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் கரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டுமே சுகாதார அனுமதிச் சீட்டு வழங்கப்படுகிறது.

இதன் விளைவாக, கிட்டத்தட்ட 9 லட்சம் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன் அனுமதியை பெற்றுள்ளனர். அதேபோல், செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் சுகாதார பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் இல்லையெனில் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மாக்ரோன் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

அதிபரின் இந்த அறிவிப்புக்கு பிறகு தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான முன்பதிவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய ஆன்லைன் வலைத்தளமான டாக்டோலிப்பின் தலைவர் ஸ்டானிஸ்லாஸ் நியோக்ஸ்-சாட்டோ தெரிவித்துள்ளார்.

உணவகங்கள், சினிமா திரையரங்குகள் ஆகிய இடங்களுக்கு செல்வதற்கும் நீண்ட தூர ரயில் பயணங்கள், விமான பயணங்கள் மேற்கொள்வதற்கும் அனுமதிச் சீட்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT