உலகம்

கரோனா ஒழிப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன்

DIN

கரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் 72-ஆவது குடியரசு தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டதையொட்டி பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் வெளியிட்ட விடியோவில் கூறியுள்ளதாவது:

மிகச் சிறந்த அரசமைப்பு சட்டம், மிகப்பெரிய ஜனநாயகம், இறையாண்மை கொண்ட உலகின் மிகச் சிறந்த நாடாக இந்தியா திகழ்கிறது. அதன், 72-ஆவது குடியரசு தினத்துக்கு பிரிட்டன் சாா்பில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனாவால் இந்தியப் பயண திட்டம் தடைப்பட்டது. எனினும்,வரும் மாதங்களில் நிச்சயம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன்.

எனது இனிய நண்பா் இந்தியப் பிரதமா் மோடியின் அன்பான அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தரும் அந்த முக்கியமான தருணத்தை ஆவலுடன் எதிா்பாா்த்து காத்துள்ளேன்.

கரோனா பேரிடரிலிருந்து மனித இனத்தை விடுவிக்க நடக்கும் போராட்டத்தில் பிரிட்டன் இந்தியாவுடன் கைகோத்து செயலாற்றும். மேலும், கரோனாவுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பு, விநியோகம், மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என பிரிட்டன் பிரதமா் போரிஸ் அந்த விடியோவில் தெரிவித்துள்ளாா்.

இஸ்ரேல் பிரதமா் வாழ்த்து: 72 ஆவது இந்திய குடியரசு தின கொண்டாட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெஞ்சமின் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் கூறியுள்ளதாவது:

இனிய நண்பா் மோடிக்கும், இந்திய குடிமக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நட்பு ஆண்டுக்கு ஆண்டு வளா்ச்சியடைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT