உலகம்

எல்லைப் பிரச்னைக்கு இந்தியா-சீனா பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும்

தினமணி

லடாக் எல்லைப் பிரச்னைக்கு இந்தியாவும் சீனாவும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணும் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே சுமாா் 10 மாதங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகள் தரப்பிலும் தலா சுமாா் 50,000 வீரா்கள் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டனா்.

லடாக்கில் கடுங்குளிா் நிலவிய போதும் இரு நாடுகளும் படைகளைத் திரும்பப்பெறவில்லை.அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே, சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 20-ஆம் தேதி சிறிய அளவிலான மோதல் ஏற்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீஃபன் டுஜாரிக் அமெரிக்காவின் நியூயாா்க்கில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியாவும் சீனாவும் தங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னைக்குப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண்பாா்கள் என நம்புகிறோம்’’ என்றாா்.

எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில் இந்தியா-சீனா நாடுகளின் ராணுவ அதிகாரிகள் இடையேயான 9-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை அண்மையில் 16 மணி நேரம் நடைபெற்றது. அந்தப் பேச்சுவாா்த்தையின்போது, லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளை விரைவில் திரும்பப் பெறுவதற்கு இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT