உலகம்

இரண்டாவது கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டார் கமலா ஹாரிஸ்!

27th Jan 2021 06:06 PM

ADVERTISEMENT

அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸ், கரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனா பரவத் தொடங்கிய காலம் முதல் தற்போது வரை கரோனா பாதிப்பில் உலக அளவில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் கடந்த மாதம் 29 ஆம் தேதி முதல் கட்ட கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதையடுத்து இன்று தேசிய சுகாதார நிறுவனத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசி அவருக்கு செலுத்தப்பட்டது. 

ADVERTISEMENT

உங்களது முறை வரும்போது தவறாமல் தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள் என்று அவர் தெரிவித்தார். 

முன்னதாக அமெரிக்காவில் பொறுப்பேற்றுள்ள பைடன் நிர்வாகம் 100 நாள்களில் 100 மில்லியன் (10 கோடி) பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Tags : Kamala Harris
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT