உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 10.08 கோடியைக் கடந்தது

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 10.08 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

புதன்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 10,08,22,401 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 21,66,950 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 7,28,37,496 பேர் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,58,15,532 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,171 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது.  அங்கு இதுவரை தொற்று பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,60,11,222 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 35 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,06,90,279 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,53,751 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 89,36,590 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 2,18,918 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகளவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கரோனா பாதிப்பு 5 கோடியை எட்டியது, மேலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சுமார் இரண்டரை மாதங்களில் இரட்டிப்பாகியது.

உலகளவில் தொற்று பாதிப்பில் அமெரிக்காவில் கால் பங்கிற்கு மேலாகவும், உயிரிழப்பில் 20 தகவீதமாகவும் உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் 11 நாள்களுக்குப் பின் மீட்பு: இளைஞா் கைது

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

SCROLL FOR NEXT