உலகம்

ஈரான் அரசியல் தலைவரின் பெயரில் மிரட்டல் விடுத்த போலி டிவிட்டர் கணக்கு முடக்கம்

22nd Jan 2021 07:14 PM

ADVERTISEMENT

அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மிரட்டல் விடுக்கும் வகையில் ஈரான் அரசின் மூத்தத் தலைவர் அலி கமேனி பெயரில் கருத்துப் பதிவிட்ட சுட்டுரைக் கணக்கை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி சுலைமானி அமெரிக்கப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதன்காரணமாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ஒத்த கோல்ப் விளையாட்டு வீரரின் படத்தைப் பதிவிட்டு ‘பழிவாங்குவது உறுதி’ ஈரானின் மூத்தத் தலைவர் அலி கமேனி  பெயரிலான சுட்டுரைக் கணக்கில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த பதிவின் மீது விசாரணை மேற்கொண்ட சுட்டுரை நிறுவனம் குறிப்பிட்ட அந்த சுட்டுரைக் கணக்கு அலி கமேனி பெயரில் போலியாக இயங்கி வருவது தெரிய வந்தthu. இதனைத் தொடர்ந்து அந்தக் கணக்கை சுட்டுரை நிறுவனம் தடை செய்தது.

ADVERTISEMENT

Tags : Iran
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT