உலகம்

இராக்கில் இரட்டைத் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 28ஆக உயர்வு

21st Jan 2021 08:55 PM

ADVERTISEMENT

இராக் தலைநகர் பாக்தாத்தில் மர்மநபர்கள் நடத்திய இரட்டை தற்கொலைப்படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 73 பேர் படுகாயமடைந்தனர்.

இராக் தலைநகர் பாக்தாத்தில் வியாழக்கிழமை உள்ளூர் சந்தையில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடந்தது. இரட்டைத் தற்கொலைப்படைத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது.

வியாழக்கிழமை மாலை நிலவரப்படி தாக்குதல் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 28ஆக அதிகரித்துள்ளது. பலரும் இந்தத் தாக்குதலில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தார், துருக்கி, ஜோர்டான், எகிப்து, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இந்த பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்துள்ளன.

ADVERTISEMENT

Tags : iraq
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT