உலகம்

பிரிட்டனில் கட்டுக்குள் அடங்காத கரோனா பரவல்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

DIN

பிரிட்டனில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தொற்று பரவல் காரணமாக கடுமையான புதிய விதிகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்க விதிமுறைகளுக்கு இணையாக புதிய கட்டுப்பாடுகள் பிரிட்டனில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜனவரி 18ஆம் தேதி முதல் பிரிட்டன் நாட்டின் எல்லைகள் மூடப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

70 சதவீதம் வரை பரவும் தன்மை அதிகரித்துள்ள புதிய வகை கரோனா நாட்டில் பரவி வருவதைத் தொடா்ந்து இநதக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் தொற்றுபாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது.

கடந்த 28 நாள்களில் கரோனா தொற்றால் 1,820 பேர் பலியாகியுள்ளதாக புதன்கிழமை தெரிவித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கரோனா இறப்புகள் எதிர்வரும் காலத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை வெளியிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவைத் தலைவா் உத்தரவை எதிா்த்து வழக்கு: மனுதாரா் விளக்கமளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிர வங்கி நிகர லாபம் 45% உயா்வு

ஆசிய யு20 தடகளம்: இந்தியாவுக்கு 7 பதக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT