உலகம்

ஜெர்மனியில் பிப்.14 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

DIN

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக பிப்ரவரி 14 ஆம் தேதி வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளை நீட்டித்து ஜெர்மனி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் குறையாத காரணத்தால் பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரிட்டன் நாடுகளில் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதியவகை கரோனா வேகமாகப் பரவி வருவதால் ஜெர்மனியில் மீண்டும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாட்டு மக்களிடையே பேசிய அதிபர் அங்கேலா மேர்க்கெல், அச்சுறுத்தும் வகையில் கரோனா தொற்று பரவி வருவதால் பொதுமுடக்கத்தை நீட்டிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக 16 மாகாண ஆளுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட மேர்க்கெல் பிரிட்டனில் இருந்து பரவிய புதிய வகை கரோனா தொற்று ஜெர்மனியில் பரவியுள்ளதைத் தொடர்ந்து பொதுமுடக்க கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

ஜெர்மனியில் இதுவரை 47,622 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT