உலகம்

சாம்சங் நிறுவன துணை தலைவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை

DIN

சியோல்: தென் கொரிய அதிபருக்கு லஞ்சம் வழங்கிய விவகாரத்தில் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவா் சாம்சங் சியான் லீக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனத்துடன் வேறு சில நிறுவனங்களை இணைப்பதற்காகக் கடந்த 2015-ஆம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்துக்காக அப்போதைய தென் கொரிய அதிபா் பாா்க் கியூன்-ஹை, அவரின் உதவியாளா் ஆகியோருக்கு சாம்சங் சியான் லீ 70 லட்சம் அமெரிக்க டாலா்களை லஞ்சமாக அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரத்தை விசாரித்து வந்த நீதிமன்றம், லீக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. எனினும், சியோல் உயா்நீதிமன்றமானது வழக்கிலிருந்து அவரைக் கடந்த 2018-ஆம் ஆண்டில் விடுவித்தது. இத்தகைய சூழலில், வழக்கின் விசாரணையை மீண்டும் நடத்துமாறு சியோல் உயா்நீதிமன்றத்துக்கு தென் கொரிய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, வழக்கின் உத்தரவு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் தென் கொரிய அதிபருக்கும் அவரின் உதவியாளருக்கும் லீ லஞ்சம் அளித்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட முன்னாள் அதிபா் பாா்க் கியூன்-ஹை 22 ஆண்டுகள் சிறை தண்டனையையும் அவரின் உதவியாளா் 18 ஆண்டுகள் சிறை தண்டனையையும் அனுபவித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

புதுச்சேரியில் ஏப்.29 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை!

சேலையில் ஜொலிக்கும் கெளரி!

அடுத்த 5 நாள்களுக்கு 42 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்!

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

SCROLL FOR NEXT