உலகம்

தடுப்பூசிகளுக்கு அனுமதி: உலக சுகாதார அமைப்பு வரவேற்பு

3rd Jan 2021 02:00 PM

ADVERTISEMENT


கோவிஷீல்டு, கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியதற்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள 'கோவேக்ஸின்' மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு இன்று (ஜன. 3) அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அவசர கால பயன்பாட்டிற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே மத்திய அரசின் இந்த முடிவுக்கு உலக சுகாதார அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. அவசர பயன்பாட்டிற்காக கரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதியளிப்பது வரவேற்கத்தக்கது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : Corona
ADVERTISEMENT
ADVERTISEMENT