உலகம்

சிரிய அகதிகள் முகாமில் தீ விபத்து: குழந்தை உட்பட நால்வர் பலி

28th Feb 2021 09:55 AM

ADVERTISEMENT

 

டமாஸ்கஸ்: வடகிழக்கு சிரியாவில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட நால்வர் பலியாகினர்.

இதுதொடர்பாக அரசின் செய்தித் தொடர்பு நிறுவனமான ‘சனா’ வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வடகிழக்கு சிரியாவில் உள்ள ஹசகா மாகாணத்தில் சிரியா ஜனநாயகப் படைகள் கூட்டணியில் உள்ள குர்திஷ் ராணுவ அணியினரால் நடத்தப்படும் அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. இங்கு பெரும்பாலும் ஐ.எஸ் அமைப்பில் இணைந்து போரிடுபவர்களின் குடும்பங்கள் தங்கியுள்ளன.

ADVERTISEMENT

இங்கு சனிக்கிழமையன்று ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை உட்பட நால்வர் பலியாகினர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ஹசகா நகர மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT