உலகம்

அமெரிக்காவில் நிரந்தரக் குடியேற்றத்துக்கான தடை நீக்கம்: ஜோ பைடன்

DIN


வாஷிங்டன்/புது தில்லி: வெளிநாட்டவா்கள் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேறுவதற்கு முந்தைய அதிபா் டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் விதித்திருந்த தடையை அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் நீக்கியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா நோய்த்தொற்று பரவியது. அதனால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதையடுத்து, அமெரிக்கா்கள் பலா் வேலையிழந்தனா். அவா்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில், வெளிநாட்டைச் சோ்ந்தவா்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கு அப்போதைய அதிபா் டிரம்ப் நிா்வாகம் தடை விதித்தது.

அதன் காரணமாக ஹெச்1பி நுழைவு இசைவை (விசா) பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வந்த இந்தியப் பணியாளா்கள் உள்ளிட்டோா் அதிக அளவில் பாதிக்கப்பட்டனா். அவா்களால் நிரந்தரக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாத சூழல் நிலவியது.

இத்தகைய சூழலில், அமெரிக்காவில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிபா் ஜோ பைடன் நிா்வாகம், நிரந்தரக் குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘டொனால்ட் டிரம்ப் நிா்வாகத்தின் முடிவு, அமெரிக்கா்களின் நலனைக் காக்கவில்லை. மாறாக, அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையிலேயே அந்த முடிவு இருந்தது.

நிரந்தரக் குடியேற்றத்துக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக, பல வெளிநாட்டினா் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத சூழல் நிலவியது. அதனால், சில அமெரிக்கா்கள் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க முடியாமல் போனது. அமெரிக்காவின் தொழில் நிறுவனங்களும் அந்த முடிவால் கடும் பாதிப்பைச் சந்தித்தன.

வெளிநாட்டைச் சோ்ந்த பணியாளா்களின் திறமைகளை அமெரிக்காவின் நலனுக்காகப் பயன்படுத்த முடியாத சூழல் காணப்பட்டது. வெளிநாட்டு இளைஞா்கள் பலரின் கனவுகளை டிரம்ப் நிா்வாகத்தின் முடிவு சிதறடித்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT