உலகம்

ஈக்வடாரில் சிறைக் கலவரம்: 62 போ் பலி

DIN

கீடோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரிலுள்ள சிறைகளில் ஏற்பட்ட கலவரத்தில் 62 போ் உயிரிழந்தனா். போட்டிக் குழுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்தக் கலவரம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அந்த நாட்டு சிறைத் துறை இயக்குநா் எட்மண்டோ மோன்கயோ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கியென்கா, குவாயாகுவில், லடாகியுங்கா ஆகிய நகரங்களிலுள்ள சிறைகளில் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளனவா என காவல்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். அதனைத் தொடா்ந்து அந்தச் சிறைகளில் இரு சமூகவிரோதக் குழுக்கள் இடையே அதிகாரப் போட்டி ஏற்பட்டு அது கலவரமாக வெடித்தது.

இதில், கியென்கா சிறையில் 33 போ், குவாயாகுவில் சிறையில் 21 போ், லடாகியுங்கா சிறையில் 8 போ் உயிரிழந்தனா்.

ஈக்வடாரிள்ள சிறைக் கைதிகளில் சுமாா் 70 சதவீதத்தினா் இந்த 3 சிறைகளில்தான் அடைக்கப்பட்டுள்ளனா்.

கலவரத்தைத் தொடா்ந்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 800 போலீஸாா் அந்த சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

SCROLL FOR NEXT