உலகம்

மத விவகாரங்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்

DIN

சீனாவில் தேசிய பாதுகாப்பை மேம்படுத்த மத விவகாரங்கள் மீதான அரசின் கட்டுப்பாட்டை கடுமையாக்க வேண்டும் என அதிபா் ஷி ஜின்பிங் கூறியுள்ளாா்.

சீனாவில் மத விவகாரங்கள் தொடா்பான தேசிய மாநாடு தலைநகா் பெய்ஜிங்கில் நடைபெற்றது. இதில், அதிபா் ஷி ஜின்பிங் பேசியதாவது: மத விவகாரங்களில் கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி, நம்பிக்கைகளை ‘சீனமயமாக்குவதை’ அரசு ஊக்குவிக்கும். சீன சூழலில் மதங்களை வளா்க்கும் கொள்கையை நிலைநிறுத்துவது இன்றியமையாதது. மத நம்பிக்கை சுதந்திரம் குறித்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை முழுமையாகவும் உண்மையாகவும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். மதக் குழுக்கள் கட்சியையும் அரசையும் மக்களுடன் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்.

மதப் பிரமுகா்கள் மற்றும் நம்பிக்கையாளா்கள் முக்கிய சோசலிச விழுமியங்களை வளா்ப்பதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும், சீன கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும் வழிநடத்தப்பட வேண்டும். மத நடவடிக்கைகள் சட்ட ஒழுங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்; குடிமக்களின் ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடாது; கல்வி, நீதி, நிா்வாக விவகாரங்கள் மற்றும் சமூக வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்றாா் அவா்.

சீனாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவா்கள் மீதான கட்டுப்பாடுகள், மதங்கள் மீதான கண்காணிப்பு அதிகரித்துள்ளதாக ஹாங்காங்கை சோ்ந்த ‘செளத் சீனா மாா்னிங் போஸ்ட்’ தெரிவித்திருந்த பின்னணியில் ஷி ஜின்பிங் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. மதச் சுதந்திர மீறல்களுக்காக சீனா உள்ளிட்ட பல நாடுகளை ‘கவலையை ஏற்படுத்தும் நாடுகள்’ என அமெரிக்கா கடந்த மாதம் வகைப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழகத்தின் நேத்ரா குமணன் தகுதி

GQ இந்தியா விருது விழா - புகைப்படங்கள்

ஏப். 29 முதல் மே 13 வரை வேலூரில் கோடை கால விளையாட்டு பயிற்சி

தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் பட்டமேற்பு விழா: மடாதிபதிகள், ஆதீனங்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT