உலகம்

குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகரிப்பு: கவலை தரும் தென்னாப்ரிக்க நிலைமை

4th Dec 2021 03:35 PM

ADVERTISEMENT


ஜோஹன்னஸ்பர்க்: ஒமைக்ரான் எனப்படும் பல மடங்கு உருமாற்றம் அடைந்த புதிய கரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட தென்னாப்ரிக்காவில், 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கும், தினசரி கரோனா பாதிப்பும் அதிகரித்திருப்பது கவலைதருவதாக உள்ளது.

வெள்ளிக்கிழமை, தென்னாப்ரிக்காவில் புதிதாக 16,055 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 25 பேர் பலியாகினர்.

கடந்த கால கரோனா பேரிடர்களின்போது, பொதுவாகவே குழந்தைகளுக்கு அதிகமாக கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அதுபோலவே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் அளவும் அதிகரிக்கவில்லை. ஆனால், தற்போதைய கரோனா அலையில், ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கும், 15 முதல் 19 வயதுடைய இளைஞர்களுக்கும் அதிகமாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே.. தீபாவளி காரணமா? அக்டோபரில் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கிய இந்தியர்கள்

ADVERTISEMENT

ஆனால் தற்போது, நான்காவது அலை உருவாகுமோ என்ற நிலையில், அனைத்து தரப்பு வயதினருக்கும் கரோனா பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு என்று தேசிய தொற்றுநோய் மையத்தின் மருத்துவர் வாஸிலா ஜஸ்ஸத் தெரிவித்துள்ளார்.

தற்போது கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவோரில் மிக அதிகமாக இருப்பது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளே, அடுத்தபடியாகத்தான் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.

இதுவரை நாம் பார்த்த காட்சிகளுக்கு நேரெதிரான நிலை தற்போது உருவாகியுள்ளது. இதுபோன்ற நிலைக்கு காரணம் என்ன என்பது குறித்து ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அடுத்த அலையின் ஆரம்பத்தில் தற்போது இருக்கிறோம். தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கான மருத்துவமனையில் படுக்கைகளை அதிகரிப்பது மற்றும் ஊழியர்களை அதிகரிப்பதுதான் அவசியம் என்று தெரிகிறது என்கிறார்கள்.
 

Tags : south africa coronavirus child ஒமிக்ரான் ஒமைக்ரான் omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT