உலகம்

ஆப்கன் ராணுவப் படை தாக்குதலில் 303 தலிபான்கள் பலி

DIN

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட ராணுவத் தாக்குதலில் 303 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசுக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. தலிபான்களை அழிக்க ஆப்கன் ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நங்கர்ஹர், லக்மான், கஜ்னி, பக்திகா, கந்தஹார், ஜாபுல், ஹெராட், ஜவ்ஜன், சமங்கன், ஃபரியாப், சார்-இ போல், ஹெல்மண்ட், நிம்ரூஸ், குண்டுஸ், பாக்லான் மற்றும் கபிசா உள்ளிட்ட பகுதிகளில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தத் தேடுதல் வேட்டையில் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 303 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 125க்கும் மேற்பட்ட தலிபான்கள் படுகாயமடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக, ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான தாகர் உட்பட பல மாவட்டங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ள அப்பகுதிகளை மீட்கும் முயற்சியை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினரை முழுமையாக திரும்ப அழைத்துக் கொள்வதற்கான இறுதிக்கப்பட்ட பணிகள் கடந்த மே மாதம் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT