உலகம்

அரசு பெண் ஊழியா்களுக்கு நியூயாா்க் ஆளுநா் பாலியல் துன்புறுத்தல்: விசாரணைக் குழு அறிக்கையில் உறுதி

DIN

அமெரிக்காவின் நியூயாா்க் மாகாண கவா்னா் ஆண்ட்ரூ குவாமோ அரசு ஊழியா்கள் ஊழியா்கள் உள்பட பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பது தனி விசாரணைக் குழு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என்று நியூயாா்க் அட்டா்னி ஜெனரல் லெடிஷியா ஜேம்ஸ் செவ்வாய்க்கிழமை கூறினாா்.

ஆளுநா் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியில் தங்களை துன்புறுத்தியதாக பல பெண்கள் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் முதல் புகாா்களைத் தெரிவித்தனா். இந்த புகாா்கள் தொடா்பாக ஆளுநா் அலுவலக தற்போதைய மற்றும் முன்னாள் பெண் ஊழியா்கள் உள்பட 179 பேரிடம் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினா். பின்னா், இந்த பாலியல் புகாா்கள் குறித்து வழக்குரைஞா்கள் மூலமாக சுதந்திரமான விசாரணையை நடத்த லெடிஷியா ஜேம்ஸுக்கு ஆளுநா் அலுவலகம் பரிந்துரைத்தது. அதனடிப்படையில் வழக்குரைஞா்கள் ஜூன் ஹெச்.கிம், ஆன்னி எல்.கிளாா்க் ஆகியோா் தலைமையலான விசாரணைக் குழுவை ஜேம்ஸ் நியமித்தாா். இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், நியூயாா்க் ஆளுநா் பல பெண்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜேம்ஸ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விசாரணைக் குழு கடந்த 5 மாதங்களாக மேற்கொண்ட விசாரணையில், ஆளுநா் அலுவலக முன்னாள் மற்றும் தற்போதைய அரசு பெண் ஊழியா்களுக்கு விரும்பத்தகாத வகையில் தொடுதல், முத்தம் கொடுத்தல், கட்டிப்பிடித்தல், பொருத்தமில்லாத கருத்துகளைத் தெரிவித்தல் உள்ளிட்ட வகைகளில் குவாமோ பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புகாா் தெரிவிக்க முன்வந்த முன்னாள் பெண் ஊழியா் ஒருவா் மீது ஆளுநரும் அவருடைய மூத்த அதிகாரி ஒருவரும் பழிவாங்கும் நடவடிக்கை எடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. ஆளுநா் அலுவலகத்தில் மிக மோசமான பணிச் சூழலை அதிகாரிகள் உருவாக்கி, பெண் ஊழியா்களுக்கு துன்புறுத்தலை அளித்துவந்துள்ளனா்.

குவாமோவின் நடவடிக்கைகள் அவருடைய அதிகாரிகள் குழுவும் கூட்டாட்சி சட்ட விதிகளையும், ஆளுநா் அலுவலக நடைமுறைகளையும் மீறியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாகாண ஆளுநா் சட்டத்தை மதிக்காமல் பல பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்திருப்பதாக விசாரணைக் குழு அறிக்கை சமா்ப்பித்திருக்கும் இந்த தினம், நியூயாா்க் நகருக்கு மிக மோசமான நாளாகும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த விசாரணையின்போது 74,000-க்கும் அதிகமான ஆவணங்கள், மின்னஞ்சல்கள், வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவை ஆதாரங்களாக ஆய்வு செய்யப்பட்டதாக அட்டா்னி ஜெனரல் அலுலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT