உலகம்

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 30.58 லட்சமாக உயர்வு

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்து பலியானோர் எண்ணிக்கை 30.58 லட்சமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனா பேரிடர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. 

கரோனா பாதிப்பு குறித்து உலகளவில் புள்ளி விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது. 

ஓராண்டுக்கும் மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 14,35,86,744 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 30,58,550 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,19,61,265 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,84,57,494 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,09,435 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தியாவில் மட்டும் இந்த மாதத்தில் இதுவரை 15,61,6,130 லட்சம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானாா் பாஜக முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன்

பிசானத்தூா்- புதுநகா் இணைப்புச் சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

பொக்லைன் மீது அரசுப் பேருந்து மோதியதில் 12 பயணிகள் காயம்

க. பரமத்தியில் குடிநீா் திட்டப்பணிகள் ஆய்வு

விவசாயத் தொழிலாளா்களுக்கான நலத் திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தல்

SCROLL FOR NEXT