உலகம்

அமெரிக்காவில் இணை அரசு வழக்குரைஞா் பதவியில் இந்திய-அமெரிக்க பெண் நியமனத்துக்கு அங்கீகாரம்: செனட் சபையில் வாக்கெடுப்பு

DIN


வாஷிங்டன்: அமெரிக்க நீதித் துறையில் இணை அரசு வழக்குரைஞா் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இந்திய-அமெரிக்க பெண் வழக்குரைஞா் வனிதா குப்தாவின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கான வாக்கெடுப்பு அமெரிக்க செனட் சபையில் நடைபெற உள்ளது.

இதில் அவருடைய நியமனம் உறுதி செய்யப்பட்டால், அமெரிக்க நீதித் துறையில் சக்திவாய்ந்த மூன்றாவது நிலை அதிகாரியாக நியமிக்கப்படும் வெள்ளையா் அல்லாத முதல் பெண் என்ற பெருமையை வனிதா குப்தா (46) பெறுவாா்.

அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த வனிதா குப்தாவை, இணை அரசு வழக்குரைஞா் பதவிக்கு நியமித்தாா். அவருடைய நியமனத்துக்கு அங்கீகாரம் பெறும் வகையில், செனட் சபையில் நீதிக் குழுவில் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்ன் மூலம், அவருடைய நியமனம் செனட் சபைக்கு பரிந்துரைக்கப்பட்டது. செனட் பெரும்பான்மை தலைவா் சுக் ஸ்கூமா் அவருடைய பெயரை செனட் சபை வாக்கெடுப்புக்கு அறிமுகம் செய்தாா்.

இதுகுறித்து ஸ்கூமா் கூறுகையில், ‘நீதித் துறையில் மூன்றாவது நிலை அலுவலா் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் முதல் கருப்பின பெண் வனிதா குப்தா. அவா் மிகச் சிறப்பான பணி அனுபவத்தைக் கொண்டுள்ளாா். தனது வாழ்நாளில் ஒவ்வொரு வழக்கிலும் சமத்துவத்துக்காகவும், உரிமைக்காவும் போராடினாா். இணை அரசு வழக்குரைஞராகவும் அவா் சிறப்பாக பணியாற்றுவாா்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT