உலகம்

ஈராக் வான்வழித் தாக்குதல்: 5 ஐ.எஸ்.பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

12th Apr 2021 11:34 AM

ADVERTISEMENT

 

ஈராக்கின் கிழக்கு மாகாணமான தியாலாவில் நடந்த வான்வழித் தாக்குதலில் ஐந்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 

ஈராக் கூட்டு நடவடிக்கை குழுவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் மாகாண தலைநகரான பாக்பாவின் வடக்கே உள்ள ஹிம்ரீன் ஏரிக்கு அருகே நான்கு மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. 

ADVERTISEMENT

ஹிம்ரீன் மலைத்தொடர் மற்றும் அருகிலுள்ள ஏரியில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக ஈராக் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தேடுதல் வேட்டை மேற்கொண்ட நிலையில், இந்த வான்வழித் தாக்குதல் நடைபெற்றதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : airstrike
ADVERTISEMENT
ADVERTISEMENT