உலகம்

ருமேனியா: 10 லட்சத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு

DIN

தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 10 லட்சத்தைத் தாண்டியது. மேலும், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கையும் 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,310 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாட்டின் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,02,865-ஆக உயா்ந்துள்ளது.

அதுமட்டுமன்றி, அந்த நோய் பாதிப்பால் மேலும் 139 போ் பலியாகினா். இதையடுத்து, அந்த நோய்க்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 25,006-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சனிக்கிழமை நிலவரப்படி, ருமேனியாவில் கரானாவால் பாதிக்கப்பட்ட 9,02,239 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 75,620 போ் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனா். அவா்களில் 1,492 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT