உலகம்

நல்ல செய்தி: உலகளவில் கரோனா தொற்றிலிருந்து 2.48 கோடிப் பேர் குணம்

29th Sep 2020 08:31 AM

ADVERTISEMENT

 

உலகம் முழுவதும் கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.48 கோடியாக உயர்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 3,35,47,933 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 2,48,76,304 கோடிப் பேர் குணமடைந்துள்ளனர். 10,06,351 பேர் பலியாகிவிட்டனர்.

சீனாவில் வூகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. பத்து மாதங்களுக்கு மேலாகியும் கரோனா நோய்த் தொற்றின் தாக்கமும் பரவலும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

ADVERTISEMENT

இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் உலகம் முழுவதும் கரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்த வகையில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,06,351 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உலகளவில் அந்த வைரஸால் இதுவரை 3,35,47,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம், 24,876,305 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி, 76,65,278 பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 65,349 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 7,361,611 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,09,808  பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் இதுவரை 61,43,019 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 96,351 பேர் பலியாகிவிட்டனர்.
 

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT