உலகம்

ரஷியாவில் மேலும் 6,595 பேருக்கு தொற்று; பாதிப்பு 11.28 லட்சமாக உயர்வு!

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,595 பேருக்கு  கரோனா தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. மேலும் 149 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 

நாட்டில் புதிதாக 6,595 பேருக்கு தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு 11,28,836 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 149 பேர் உள்பட இதுவரை 19,948 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரத்தில் தற்போதுவரை 9,29,829 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி 2,22,014 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தலைநகர் மாஸ்கோவில் இன்று 1,050 பேர் உள்பட இதுவரை 2,80,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், இந்தியாவைத் தொடர்ந்து ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT