உலகம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

24th Sep 2020 09:29 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. 

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகருக்கு மேற்கே 40 கி.மீ. தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  காலை 5.46 மணியளவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் இருந்து வடகிழக்கே 237 கி.மீ. தொலைவில் இன்று காலை 5.33 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. எனினும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

Tags : earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT