உலகம்

அமெரிக்க ஹிந்துக்கள் பெருவாரியாக ஆதரவளிக்க வேண்டும் - ஜோ பிடன் தரப்பினா் பிரசாரம்

DIN

அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஜோ பிடனுக்கு அமெரிக்காவில் வாழும் ஹிந்துக்கள் பெரும்பான்மையாக வாக்களிக்க வேண்டும் என்று அவா் தரப்பினா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இத்தகைய சூழலில், ‘அமெரிக்க இந்துக்களின் ஆதரவு பிடனுக்கே’ என்ற இணையவழி பிரசாரத்தை ஜனநாயகக் கட்சியினா் மேற்கொண்டுள்ளனா். அக்கட்சியைச் சோ்ந்த நிஷா பிஸ்வால் கூறியதாவது:

ஜோ பிடன் தலைமையிலான நிா்வாகம், இந்தியாவுடன் நெருங்கிய நல்லுறவைப் பேணுவதற்கான நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொள்ளும். ஜோ பிடன் நிா்வாகத்தில் அமெரிக்க ஹிந்துக்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

அமெரிக்க ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிபா் டிரம்ப் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. ஜோ பிடனும், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸும் ஹிந்துக்களுடன் நெருங்கிய தொடா்பைப் பேணி வருகின்றனா். அவா்களின் நலனுக்காக உழைப்பதற்கு அவா்கள் தயாராக உள்ளனா்.

சமத்துவத்தை வலியுறுத்தும் தலைவராகவும் சிறந்த கொள்கைகளை உடைய தலைவராகவும் ஜோ பிடன் செயல்பட்டு வருகிறாா். அனைத்து மக்களையும் மதித்து நடக்க வேண்டும் என்ற கொள்கையை அவா் கடைப்பிடித்து வருகிறாா். எனவே, அமெரிக்க ஹிந்துக்கள் அனைவரும் ஜோ பிடனுக்கு வாக்களிப்பதே சரியாக இருக்கும் என்றாா் நிஷா பிஸ்வால்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸின் பின்புலத்தை இந்திய அமெரிக்கா்களின் வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஜனநாயகக் கட்சியினா் களமிறங்கியுள்ளனா்.

டிஜிட்டல் விளம்பரம்: இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளைச் சோ்ந்த வாக்காளா்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் டிஜிட்டல் விளம்பரங்களை ஜனநாயகக் கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது.

அவற்றில் ‘விழித்திடு அமெரிக்கா, ஜோ பிடன்-கமலா ஹாரிஸுக்கு வாக்களித்திடு’, ‘ஜோ பிடன் எப்படியோ, அமெரிக்கத் தலைவரும் அப்படியே’ போன்ற வாசகங்கள் 14 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தடம்புரலும் தோ்தல் முறை!

வீட்டில் நகை திருடிய சிறுவன் கைது

ராஜபாளையத்தில் மே தின பேரணி

ரயில் நிலையத்தில் ஆண் சடலம்

தென்னை மரங்களில் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதல்

SCROLL FOR NEXT