உலகம்

உலகளவில் கரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 9,65,068 ஆக உயர்வு

DIN

உலகளவில் கரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 9,65,068 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு தொடர்கிறது. இந்த நிலையில் உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது. 

திங்கள்கிழமை காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,12,40,262 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,65,068 ஆக உள்ளது. கரோனா பாதித்த 3 கோடி பேரில் 2.28 கோடி பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது 74,39,735 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின்ல 61,220 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 

உலகளவில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 70,04,768 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,04,118 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடத்தில் இந்தியா, பிரேசில், ரஷியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. அந்த வகையில் இந்தியாவில் 5,48,7,580 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே செப்டம்பர் மாதத்தில் உலகிலேயே அதிக அளவில் கரோனா பாதிப்பு, பலி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்: பிரதமா் மோடி

பள்ளிகளில் குழந்தைகளை அடித்தாலோ, திட்டினாலோ நடவடிக்கை எடுக்கப்படும்: கல்வித் துறை

ரஷியாவுக்கு உதவினால் பொருளாதாரத் தடைகள்

தென்னிந்திய நீா்தேக்கங்களில் நீா் இருப்பு: 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு கடும் சரிவு

காஸாவில் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் ஆகும்!

SCROLL FOR NEXT