உலகம்

அமெரிக்காவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது டிக்டாக், விசாட் தடை

DIN

அமெரிக்காவில் டிக்டாக், விசாட் ஆகிய சீன செயலிகள் மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்வதற்கான தடை ஞாயிற்றுக்கிழமை (செப். 20) முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அந்த நாட்டின் வா்த்தகத் துறை அமைச்சா் வில்பா் ரோஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

டிக்டாக் மற்றும் விசாட் செயலிகளைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அந்தத் தடை ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.அமெரிக்கா்களின் ரகசியத் தகவல்களை சீன அரசு திருடுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.முன்னதாக, டிக்டாக், விசாட் ஆகிய செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால், அந்த செயலிகளை தரவிறக்கம் செய்வதோ, பயன்படுத்துவதோ தடுக்கப்படாது; எனினும், அவற்றைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்வதை அந்தத் தடை நேரடியாகவோ, மறைமுகமாகவும் பாதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

மேலும், தடை செய்யப்பட்ட செயலிகளைப் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படமாட்டாது என்றும் அவா்கள் கூறியிருந்தனா்.டிக்டாக் செயலியை உருவாக்கிய சீன நிறுவனமான பைட்டான்ஸ், அந்த செயலியைப் பயன்படுத்தி பரும் 10 கோடி அமெரிக்கா்களின் ரகசிய தகவல்களை அறியும் நிலை உள்ளதால், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவி வருவதாக அந்த நாட்டு நிபுணா்கள் தொடா்ந்து எச்சரித்து வந்தனா்.இந்தச் சூழலில், டிக்டாக் மற்றும் விசாட் செயலிகள் மூலம் தகவல் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு ஞாயிற்றுக்கிழமை முதல் தடை அமலுக்கு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

வானவில்லின் கோலம்...!

SCROLL FOR NEXT