உலகம்

ரஷியாவில் 11 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு

DIN

ரஷியாவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்குகிறது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் அமெரிக்கா, இந்தியா, பிரேசிலைத் தொடர்ந்து ரஷியாவிலும் வேகமெடுத்து வருகிறது. கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷியா 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ரஷியாவில் பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தை நெருங்குகிறது. 

இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 6,065 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதிகபட்சமாக மாஸ்கோவில் 825 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,97,251 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 144 பேர் உள்பட இதுவரை 19,339 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,255 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,06,462 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிபுத்திசாலி ஐபிஎஸ் ஏன் முன்பே பேசவில்லை? - அண்ணாமலைக்கு செல்லூர் ராஜு கேள்வி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து போலிச் செய்தி: 4 பேர் மீதுவழக்குப்பதிவு!

ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் புதிய சாதனை!

‘இது நடந்தால் வாட்ஸ்ஆப் இந்தியாவிலிருந்து வெளியேறும்’ : உயர்நீதிமன்றத்தில் மெட்டா வாதம்!

நாய்க்கு புலி வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞர்கள்: காவல்துறையினர் விசாரணை

SCROLL FOR NEXT