உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 3,03,49,591:  பலி 9.50 லட்சமாக உயர்வு

DIN


உலக அளவில் கரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 591 ஆக உயர்ந்துள்ளது. 

உலக முழுவதும் பெரும்பாலான நாடுகளில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலக அளவில் மொத்த கரோனா பாதிப்பு 3,03,49,591 கோடியைத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 73,60,448 பேர் கரோனா தொற்றுக்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் தொற்று பாதிப்புக்கு இதுவரை 9,50,555 பேர் உயிரிழந்துள்ளனர், 2,20,38,588 பேர் கரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 61,129 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

உலகளவில் கரோனா பாதிப்பில் மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அதன்படி அமெரிக்காவில் 68,74,596 பேரும், அதையடுத்து இந்தியாவில் 52,12,686 பேரும், பிரேசிலில் 44,57,443 பேரும், ரஷியாவில் 10,85,281 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழமாளிகை, குழுமூா் திரெளபதியம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா

பெரம்பலூா் அருகே சொத்துக்காக தந்தையைத் தாக்கிய மகன் கைது: சாா்பு- ஆய்வாளா் பணியிட மாற்றம்

2024-25 கல்வியாண்டில் 157 கல்லூரிகளில் புதிய பாட வகுப்புகள், கூடுதல் பிரிவுகள்! கருத்துரு கேட்கிறது பாரதிதாசன் பல்கலைக்கழகம்

சரக்கு வாகன ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

ஊராட்சி மன்றத் தலைவரின் மகனுக்கு அரிவாள் வெட்டு காா் ஓட்டுநா் கைது

SCROLL FOR NEXT