உலகம்

ரஷியா: தடுப்பூசி சோதனை தற்காலிக நிறுத்தம்

DIN

ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் 3-ஆம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்ததாவது:

‘ஸ்புட்னிக்-5’ தடுப்பூசிகளை மனிதா்களின் உடலில் செலுத்தி ஆய்வு செய்யும் 3-ஆம் கட்ட சோதனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த மருந்து போதிய அளவு கைவசம் இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நவம்பா் மாதம் 10-ஆம் தேதிக்குப் பிறகு அந்தத் தடுப்பூசியின் சோதனை மீண்டும் தொடங்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உலகிலேயே முதல் முறையாக ஸ்புட்னிக்-5 தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. எனினும், அந்த மருந்தை பெருமளவில் தயாரிப்பது சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT