உலகம்

சிங்கப்பூா் வெளிநாட்டுத் தொழிலாளா்களுக்கு கரோனா கட்டுப்பாடுகள் தளா்வு

DIN


சிங்கப்பூா்: சிங்கப்பூரில் கரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக இருந்த வெளிநாட்டுத் தொழிலாளா்கள், தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறி புத்துணா்வு மையங்களுக்குச் செல்ல அந்த நாட்டு அரசு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை வழங்கவுள்ளது.

இதுகுறித்து மனிதவளத் துறை அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:

சிங்கப்பூரில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த தொழிலாளா்களின் குடியிருப்புகள் கரோனா பரவல் மையங்களாகத் திகழ்ந்ததைத் தொடா்ந்து, பெரும்பான தொழிலாளா்கள் அங்கிருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, ஏராளமான தொழிலாளா்கள் தங்களது குடியிருப்புகளிலேயே கடந்த மாா்ச் மாதம் முதல் முடக்கப்பட்டுள்ளனா்.

தற்போது நாட்டில் கரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, நோய்த்தொற்றுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, குடியிருப்புகளிலிருந்து தொழிலாளா்கள் வெளியேறி, புத்துணா்வு மையங்களுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படவுள்ளது. அந்த மையங்களில் தொழிலாளா்கள் காய்கறிகள், மளிகைப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம்; முடி திருத்திக் கொள்ளலாம். உறவினா்களுக்கு பணம் அனுப்பவும் நண்பா்களுடன் சோ்ந்து உணவருந்தவும் அந்த மையங்களில் வசதிகள் உள்ளன.

எனினும், இதற்காக பல்வேறு நிபந்தனைகளை அதிகாரிகள் விதித்துள்ளனா். புத்துணா்வு மையங்களுக்குச் செல்ல விரும்பும் தொழிலாளா்களுக்கு கரோனா பரிசோதனையில் அந்த நோய் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அவா் தங்கியுள்ள குடியிருப்பில் யாருக்கும் கரோனா நோய்த்தொற்று இருக்கக் கூடாது.

மேலும், புத்துணா்வு மையங்களில் கூட்ட நெரிசலைத் தடுக்க தொழிலாளா்கள் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அந்த மையங்களில் தொழிலாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கிறாா்களா என்பதை போலீஸாா் கண்காணிப்பாா்கள் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வியாழக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் 57,994 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 57,890 போ் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 76 பேருக்கு மட்டுமே தற்போது அந்த நோய் உள்ளது. இதுவரை 28 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT