உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவு

28th Oct 2020 06:07 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு காபூலில் புதன்கிழமை மாலை ரிக்டர் அலகில் 4.2 அளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை மாலை 4.18 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 4.2ஆகப் பதிவாகி உள்ளது.

காபுலின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

ADVERTISEMENT

Tags : Earthquake
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT