உலகம்

கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்: மெக்ஸிகோ ஒப்புதல்

27th Oct 2020 09:31 PM

ADVERTISEMENT

கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் என மெக்ஸிகோ அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை மெக்ஸிகோவில் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து மெக்ஸிகோ அதிக இறப்புகளைப் பதிவு செய்து வருகிறது. இதுவரை மெக்ஸிகோவில் 88 ஆயிரத்து 924 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் மெக்ஸிகோவின் தடுப்பு திட்டங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் ரூய் லோபஸ் ரிடோரா, மெக்ஸிகோவில் கரோனா இறப்புகளின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்ட அளவை விட அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோவில் சராசரிகளின் அடிப்படையில் 5,24,920 இறப்புகள் ஆண்டின் தொடக்கத்திற்கும் செப்டம்பர் 26 க்கும் இடையில் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் உண்மையில்  718,090 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது 1,93,170 இறப்புகள் அதிகப்படியாக உள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பால் குறைந்தது 139,153 பேரை பலியாகி இருக்கலாம் என லோபஸ் தெரிவித்தார்.

மேலும் கரோனாவால் இறந்தவர்களில் 63 சதவிதத்தினர் 45-64 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT