உலகம்

கரோனா பரவல்: இலங்கையின் 2 துறைமுகங்கள் மூடப்பட்டன

24th Oct 2020 12:11 PM

ADVERTISEMENT

இலங்கை துறைமுகப் பகுதியில் 609 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து 2 மீன்பிடித் துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன.

துறைமுகத்துடன் கரோனா அதிகம் பரவும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள இலங்கையின் 11 பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவி வருகிறது. அந்தவகையில் இலங்கையிலும் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இலங்கை துறைமுகத்தில் முதன்முறையாக 49 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ஒருநாள் தற்காலிகமாகத் துறைமுகம் மூடப்பட்டது.

ADVERTISEMENT

இதனிடையே துறைமுகத்தில் நூற்றுக்கும் அதிகமான வர்த்தகர்கள் பரிசோதனை செய்துக்கொண்டதில் கரோனா பாதிப்பு 609-ஆக அதிகரித்துள்ளது.  இதனால் இரண்டு துறைமுங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மேலும், நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு வருவதால், பலர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு மக்கள் பொது இடங்களில் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : srilanka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT