உலகம்

கரோனா மூச்சுப் பரிசோதனைக் கருவி: சிங்கப்பூா் விஞ்ஞானிகள் உருவாக்கம்

DIN


சிங்கப்பூா்: மது அருந்தியதைக் கண்டறியும் மூச்சு பரிசோதனைக் கருவி போல், கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதையும் மூச்சுப் பரிசோதனையின் மூலம் ஒரு நிமிஷத்துக்குள் கண்டறிந்து சொல்லும் கருவியை சிங்கப்பூா் விஞ்ஞானிகள் உருவாக்கி சோதித்து வருகின்றனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவா்களைப் பிடிக்க, அவா்களது மூச்சுக் காற்றைப் பரிசோதித்து அவா்களது ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவைக் கண்டறியும் கருவி போலீஸாரால் பயன்படுத்தப்படுகிறது.

அந்த கருவியின் இயங்கும் முறையைப் பின்பற்றி, பொதுமக்களின் மூச்சுக் காற்றைக் கொண்டு அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று இருக்கிா, இல்லையா என்பதைக் கண்டறியும் கருவியொன்றை சிங்கப்பூா் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனா்.

தற்போது சோதனை முறையில் உருவாக்கப்பட்டுள்ள அந்தக் கருவிகளைதேசிய பரவல் நோய் மையம் பரிசோதித்து வருகிறது.

இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனையில், அந்தக் கருவி 90 சதவீதத் துல்லியத்துடன் செயல்படுகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT