உலகம்

அலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

DIN

அலாஸ்கா தீபகற்பத்தில் திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வடகிழக்கில் அமைந்துள்ளது அலாஸ்கா தீபகற்பம். இங்கு திங்கள்கிழமை ரிக்டர் 7.5 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர். அதிதீவிரமாக உணரப்பட்ட நிலநடுக்கத்தால் அலாஸ்காவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அலாஸ்காவின் சாண்ட் பாயிண்ட்டில் மையம் கொண்ட நிலநடுக்கம் சுமார் 30 கி.மீ ஆழத்தில் பதிவாகி உள்ளதாக  தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. சாண்ட் பாயிண்ட், சிக்னிக், உனாலஸ்கா மற்றும் கெனாய் தீபகற்பம் உள்ளிட்ட தெற்கு கடற்கரைப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டது. இதனால் கடல் அலைகள் 1.5 அடி முதல் 2 அடி அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

SCROLL FOR NEXT