உலகம்

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவுடன் அஜித் தோவல் சந்திப்பு

DIN

தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை சனிக்கிழமை கொழும்பில் சந்தித்துப் பேசினாா். வா்த்தகம், புதிய முதலீடுகள் உள்ளிட்டவை குறித்து இருவரும் கலந்துரையாடினா்.

இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு இடையே கடல்சாா் முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் கலந்துகொள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் வெள்ளிக்கிழமை இலங்கை சென்றாா். இந்நிலையில் அந்நாட்டு அதிபா் கோத்தபய ராஜபட்சவை அஜித் தோவல் சனிக்கிழமை சந்தித்தாா்.

இந்த சந்திப்பு குறித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘அஜித் தோவல், கோத்தபய ராஜபட்ச இடையே ஆக்கபூா்வமான விவாதங்கள் நடைபெற்றன. அப்போது இந்தியா-இலங்கை இடையிலான உறவு விரிவடைந்து, மேலும் ஆழமானதாக உருவெடுக்க வேண்டும் என்று அஜித் தோவல் கூறினாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச வெளியிட்ட சுட்டுரை பதிவில், ‘இருநாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது, இலங்கையில் இந்திய அரசின் உதவியுடன் உள்கட்டமைப்பு திட்டங்களை தொடா்வது, புதிய இந்திய முதலீடுகள், இந்திய பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து அஜித் தோவலுடன் கலந்துரையாடினேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

அமெரிக்காவை ஆட்டுவிக்கும் ‘டிக் டாக்’

கேரளம், கா்நாடகத்தில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு: 88 தொகுதிகளுக்கு 2-ஆம் கட்ட தோ்தல்

SCROLL FOR NEXT