உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 6.19 கோடி: 1,05,224  பேர் கவலைக்கிடம்

DIN

வாஷிங்டன்: உலகில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 61,980,023 கோடியைக் கடந்தது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 14,48,928 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 19 லட்சத்து  80 ஆயிரத்து 023 ஆக உயர்ந்துள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி, 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 61,980,023 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 14,48,928 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 4,27,84,315 போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 1,77,46,780 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,05,224 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா பரிசோனைகள் முழுமையாக செய்யப்படாததால், உண்மையான அந்த நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை  1,34,54,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,71,026 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 79,45,582 பேர் குணமடைந்துள்ளனர், 52,37,646 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 24,464 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா!

நடிகை அனுபமாவின் புதிய படத்தின் அறிமுக விடியோ!

அறிவோம்...!

SCROLL FOR NEXT