உலகம்

உலக அளவில் கரோனா பாதிப்பு 6.13 கோடியைக் கடந்தது

27th Nov 2020 08:49 AM

ADVERTISEMENT

 

வாஷிங்டன்: உலகில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 6,13,02,037 கோடியைக் கடந்தது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6 கோடியே 13 லட்சத்து  2 ஆயிரத்து 37 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6,13,02,037 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 14,37,635 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 4,23,93,123 போ் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 1,74,71,279 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,04,903 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பல்வேறு நாடுகளில் கரோனா பரிசோனைகள் முழுமையாக செய்யப்படாததால், உண்மையான அந்த நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

உலகில் கரோனா தொற்றுக்கு மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்கா உள்ளது. அங்கு இதுவரை  13,248,676 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,69,555 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த்துள்ளனர். 7,846,872 பேர் குணமடைந்துள்ளனர், 5,132,249 பேர் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 24,396 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.  
 

Tags : coronavirus Global
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT