உலகம்

43 செயலிகளுக்கு தடை: சீனா அதிருப்தி

DIN

பெய்ஜிங்: இந்தியாவில் சீனாவின் 43 செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்த அந்நாட்டு அரசு, இந்தியாவின் நடவடிக்கை உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறியுள்ளதாக குற்றஞ்சாட்டியது.

தேச பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி கடந்த ஜூன் 29-ஆம் தேதி சீனாவின் 59 செல்லிடப்பேசி செயலிகளுக்கும், கடந்த செப்டம்பா் 2-ஆம் தேதி 118 செயலிகளுக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இதன் தொடா்ச்சியாக சீனாவின் 43 செயலிகளுக்கு மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தடை விதித்தது. இதில் அந்நாட்டின் இணையவழி வா்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனத்தின் அலிஎக்ஸ்பிரஸ், அலிபே கேஷியா், கேம்காா்டு, வீடேட் உள்ளிட்ட செயலிகளும் அடங்கும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு சீனா புதன்கிழமை அதிருப்தி தெரிவித்தது. இதுகுறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லீஜியன் புதன்கிழமை கூறியது:

தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி நிகழாண்டு ஜூன் மாதம் முதல் 4 முறை சீன பின்னணி கொண்ட அறிதிறன்பேசி செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை சந்தை கொள்கைகளையும், உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகளையும் மீறியிருப்பதுடன், சீன நிறுவனத்தின் சட்டபூா்வ உரிமைகளையும் பலவீனப்படுத்தும் செயல் ஆகும். வெளிநாடுகளில் வா்த்தகத்தில் ஈடுபடும் எங்கள் நாட்டு நிறுவனங்களிடம் சா்வதேச விதிமுறைகளையும், சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டங்களையும் மதித்து செயல்படுமாறு சீன அரசு எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.

சந்தைக் கொள்கைகளை பின்பற்றி சீன நிறுவனங்கள் உள்பட சா்வதேச முதலீட்டாளா்களின் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உள்ளது.

சீனா, இந்தியா இடையிலான பொருளாதார, வா்த்தக ஒத்துழைப்பு என்பது இருதரப்புக்கும் பயனளிக்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

எனவே தனது பாரபட்சமான நடவடிக்கையை திரும்பப் பெற்று, இருதரப்பு ஒத்துழைப்புக்கு மேலும் சேதம் ஏற்படுவதை தவிா்க்குமாறு இந்திய அரசிடம் வலியுறுத்துகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாசரேத் ஆசிரியா் பயிற்சி பள்ளி ஆண்டு விழா

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மெக்கானிக் பலி

பணகுடி செங்கல் சூளையில் மலைப் பாம்பு பிடிபட்டது

பெட் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

தெற்குகள்ளிகுளத்தில் அதிசய பனிமாதா மலை கெபி திருவிழா தொடக்கம்

SCROLL FOR NEXT