உலகம்

சாலைகளில் குழந்தை பெறும் அவலம்: எத்தியோப்பிய மக்களின் துயரம்

25th Nov 2020 02:03 PM

ADVERTISEMENT


எத்தியோப்பியாவைச் சேர்ந்த பெண்கள் சாலைகளில் குழந்தை பெறும் அவல நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

எத்தியோப்பியாவைச் சேர்ந்த பெண் அகதி டெர்ஹாஸ் த்ஃபா என்பவர் அம்ஹாரா பிராந்தியத்தில் இருந்து சூடான் செல்லும் வழியில் நடந்து சென்ற போது ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். காட்டுப்பகுதியில் டெர்ஹாஸ் சுமார் ஏழு மணி நேரம் தனியாக நடந்து சென்ற நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது  அவல நிலை என்றாலும் முகாமில் உள்ள மற்ற அகதிப் பெண்களுக்கும் இதே நிலைமைதான்.

எத்தியோப்பிய அரசாங்கத்தின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் டைக்ரே பிராந்தியத்தில் இருந்து தப்பிச் செல்லும் 40,000க்கும் அதிகமான அகதிகளின் நிலைமை இதுவே.

இந்த முகாமில் தற்போது சுமார் 700 பெண்கள் கர்ப்பமாக உள்ளனர் என்றும் அதில் குறைந்தது ஒன்பது பேர் சூடானில் குழந்தைகளைப் பெற்றெடுக்க வாய்ப்புள்ளதாகவும்  ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : Ethiopian
ADVERTISEMENT
ADVERTISEMENT