வடக்கு சிரியாவின் இரண்டு பகுதிகளில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
சிரியாவின் அல்-பாப் நகரில் காவல்துறைத் தலைவரின் காரில் நடப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் காவல்துறை அதிகாரியும், இரண்டு காவலர்களும் பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர்.
அதேபோல் அஃப்ரின் நகரில், ஒரு பேக்கரி அருகே காரில் வெடிகுண்டு வெடித்ததில், மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.
2017 முதல் தீவிரவாத அமைப்புகளிடமிருந்து துருக்கியப் படைகள் கைப்பற்றியதில் இருந்து அல்-பாப்பில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
ADVERTISEMENT