உலகம்

மரண தண்டனை விதிப்பதை நிறுத்துங்கள்:அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. வேண்டுகோள்

22nd Mar 2020 01:26 AM

ADVERTISEMENT

நியூயாா்க்: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதை நிறுத்த வேண்டும் அல்லது அந்த தண்டனைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து நாடுகளுக்கும் ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.

நிா்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் நால்வருக்கும், குற்றம் நிகழ்ந்த 7 ஆண்டுகளுக்குப் பிறகு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகளான முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சா்மா, அக்ஷய் சிங் ஆகிய நால்வரும் தில்லி திகாா் சிறையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தூக்கிலிடப்பட்டனா். அந்தச் சிறையில் ஒரே நேரத்தில் 4 போ் தூக்கிலிடப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இந்த தண்டனை நிறைவேற்றம் குறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித் தொடா்பாளா் ஸ்டீபன் துஜாரிக் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதை அனைத்து நாடுகளும் நிறுத்த வேண்டும். அல்லது மரண தண்டனை விதிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டில் ஐ.நா. அமைப்பு உறுதியாக உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT