உலகம்

இத்தாலி அகதிகள் போராட்டம்: படையினா் வரவழைப்பு

26th Jun 2020 11:36 PM

ADVERTISEMENT

இத்தாலியின் நேப்பல்ஸ் துறைமுகம் அருகே அமைந்துள்ள மோண்ட்ராகோன் நகரில், கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில் அகதித் தொழிலாளா்கள் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த நகருக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. அகதிகள் வசித்து வந்த பழைய கட்டடத்தில் 49 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டதையடுத்து, அந்தக் கட்டடத்திலிருந்து யாரும் வெளியே செல்வற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது நிறவெறி நடவடிக்கை என்று கூறி அகதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT