உலகம்

கொவைட் 19 நோயை ஒழிக்க சீனா எடுத்த நடவடிக்கைகள் பற்றிய வெள்ளையறிக்கை வெளியீடு!  

8th Jun 2020 10:55 AM

ADVERTISEMENT

கொவைட் 19 நோயை ஒழிக்க சீனா எடுத்த நடவடிக்கைகள் பற்றிய வெள்ளையறிக்கையை சீன அரசவையின் தகவல் தொடர்பு அலுவலகம் 7ஆம் நாள் வெளியிட்டது.

சுமார் 37 ஆயிரம் சொற்களைக் கொண்ட இந்த அறிக்கையில் 4  முக்கிய பகுதிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக கொவைட் 19 நோயை ஒழிக்க சீனா எடுத்த நடவடிக்கைகளையும் எட்டியுள்ள சாதனைகளையும் பற்றி இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவைட் 19 நோய் கடந்த 100 ஆண்டுகளில் மனித குலம் சந்தித்திராத மிகப் பெரிய அளவிலான தொற்று நோயாகும். முன்பு கண்டிராத, திடீரென்ற தோன்றிய, மிக கடுமையான தொற்று நோயைச் சந்தித்த சீன அரசு, உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டது என்று இவ்வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சீன கம்யூனிஸ்ட் கட்சியும் சீன அரசும் இத்தொற்று நோய் தடுப்பில் உயர்வாக கவனம் செலுத்தின. சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், தடுப்புப் பணிக்குத் தலைமை தாங்கி, பொது மக்களுக்கு மனவுறுதியை அளித்தார் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித குல பொது சமூகம் என்ற கருத்தை கொண்ட சீனா, பொறுப்புடன் இதர நாடுகளுடன் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒற்றுமையும் ஒத்துழைப்பும் கொவைட் 19 நோயை அழிக்கும் வலிமைமிக்க ஆயுதமாகும். எனவே பன்னாடுகள், பொது மக்களின் உயிர் மற்றும் ஆரோக்கிய பாதுகாப்பையும் வருங்கால தலைமுறையையும் கருத்தில் கொண்டு, மனித குல பொது சமூகம் என்ற கருத்திலும் ஊன்றி நின்று, ஒத்துழைப்பு மேற்கொண்டு, இந்நோயை அழிக்க வேண்டும் என்று இவ்வெள்ளையறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம் 

Tags : china
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT