உலகம்

ஜெர்மனியில் புதிதாக 781 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 2,04,964ஆக உயர்வு

25th Jul 2020 04:36 PM

ADVERTISEMENT

ஜெர்மனியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 781 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் ஜெர்மனியிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 781 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் நாட்டில் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,04,964ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்த வைரஸுக்கு மேலும் 7 பேரி பலியானதையடுத்து ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 9,118ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,89,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே உலகளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,69,934 கோடியை தாண்டியுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை பலியானோர் எண்ணிக்கை 6,43,399 ஆக உயர்ந்துள்ளது.  
 

Tags : germany
ADVERTISEMENT
ADVERTISEMENT