உலகம்

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 60 பேர் பலி

13th Jul 2020 12:23 PM

ADVERTISEMENT

நேபாளத்தில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். 

நேபாளத்தில் கடந்த நான்கு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டில் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் மியாக்தி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

ஏராளமானோர் வீடுகளிலும் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு பள்ளிகள் மற்றும் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் பலியாகியுள்ளனர். 41 பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மியாக்தி மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவுகளில் சிக்கி 27 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

Tags : nepal
ADVERTISEMENT
ADVERTISEMENT