உலகம்

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் மிதமான நிலநடுக்கம்

13th Jul 2020 11:38 AM

ADVERTISEMENT

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 

அந்தமான் நிகோபர் தீவு பகுதிகளில் ஒன்றான டிகிலிபூரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 2.36 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 அலகாக பாதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. 

நிலநடுக்கத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. எனினும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : earthquake
ADVERTISEMENT
ADVERTISEMENT